அஇஅதிமுக-வின் 51வது தொடக்க விழாவை முன்னிட்டு சிவகிரி, அம்மன் கோவில், கொடுமுடி ஆகிய இடங்களில் மொடக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் V.P சிவசுப்பிரமணி அவர்கள் தொண்டர்களோடு தொண்டர்களாக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பேட்டைசின்னு, மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கணபதி, துணைத்தலைவர் மயில் சுப்பிரமணி, எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பெரிய தம்பி, கொடுமுடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பரமசிவம், எழுநூற்றி மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், முன்னாள் கவுன்சிலர் வாசுதேவன், ரயில்வே பெரியசாமி, ஆறுமுகம், கொம்பனை மூர்த்தி, தகவல் தொழில்நுட்பப் பிரிவைச்சேர்ந்த கௌதம், தனசேகர் உட்பட அ இ அதிமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர், இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் இணையதள செய்தியாளர் பூபாலன்.
No comments:
Post a Comment