இக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே. எஸ்.தென்னரசு முன்னிலை வகித்தார், ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் தமிழக முன்னாள் அமைச்சர் திரு கே.வி.ராமலிங்கம் அவர்களும், பேராசிரியர் திரு.ச. கல்யாணசுந்தரம் அவர்களும் சிறப்புரையாற்றினர், பொதுக்கூட்ட தலைமையாக அசோகபுரம் பகுதி கழக செயலாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் திரு முனுசாமி அவர்கள், கருங்கல்பாளையம் பகுதி கழக செயலாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் திரு.முருகநாதன் மற்றும் பி.பி. அக்ரஹாரம் பகுதி கழக செயலாளர் கூட்டுறவு வங்கித் தலைவர் கே. ராமசாமி அவர்கள் தலைமை வகித்தனர்.
வரவேற்பு முறையாக வீரப்பன்சத்திரம் பகுதிக் கழக செயலாளர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் திரு. பி.கேசவமூர்த்தி அவர்கள், பெரியார் நகர் பகுதி கழக செயலாளர் கூட்டுறவு வங்கித் தலைவர் திரு. இரா. மனோகரன், மற்றும் வட்ட நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், என ஏராளமானோர் கழக பொன்விழா நிறைவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment