ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 67 பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 11 October 2022

ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 67 பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலம்.

ஈரோடு மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 67 பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


இது தொடர்பாக ஈரோடு மாவட்ட காவல் துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், ஈரோடு மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 67 (ஆண் 58, பெண் 9) பணியிடங்களை நிரப்ப 20 வயதுக்கு மேற்பட்ட 45 வயதுக்குட்பட்ட 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நல்ல உடற்தகுதி உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  விண்ணப்ப படிவங்கள் ஆன்லைன் (Online) மூலமாகவோ அல்லது ஈரோடு மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஈரோடு மாவட்ட ஊர்க்காவல்படை அலுவலகம், பன்னீர்செல்வம் பார்க்,  ஈரோடு என்ற முகவரியிலோ காலை 10 மணி முதல் பெற்றுக்கொள்ளலாம்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுக்கா செய்தியாளர் அஜித்.

No comments:

Post a Comment