தமிழக அரசின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 10 October 2022

தமிழக அரசின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்.

தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மூலம் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் மொடக்குறிச்சி வட்டம், அவல்பூந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் 46 புதூர் அரசு ஆரம்பப்பள்ளியில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் திரு. அ. கணேசன் மூர்த்தி அவர்கள் மற்றும் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.


இந்த சிறப்பு முகாமில் இதய நோய், இரத்த அழுத்த நோய்கள், சர்க்கரை நோய், தோல் நோய், கண் மருத்துவம், காசநோய், புற்றுநோய், கர்ப்பிணி பெண்களுக்கு உண்டான ஆலோசனைகள், கண், காது, மூக்கு, தொண்டை பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, பொது மருத்துவம், சித்த மருத்துவம், பல் மருத்துவம் போன்ற மருத்துவ சிகிச்சைகள் சிறந்த மருத்துவ நிபுணர்களால் இலவசமாக (மருத்துவம் மற்றும் மருந்துகள்) அளிக்கப்பட்டது.


இம்முகாமில் தேர்வு செய்யப்பட்ட நோயாளிகள் ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் அவல்பூந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர், மற்றும் இதர பணியாளர்கள், மொடக்குறிச்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் கணபதி , கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர் ஆர். பிரகாஷ் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள், பெருந்திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment