SDTU தொழிற்சங்கத்தின் மாநில பொருளாளர் மற்றும் ஈரோடு தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் பங்கேற்பு: மதச்சார்பற்ற தேசத்தை வெறுப்பு அரசியல் மூலம் வன்முறையை தூண்டும், தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கும்பல்களுக்கு எதிராகவும், மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம், மத அமைதியை பாதுகாக்கவும் தமிழகம் முழுவதும் மனிதச்சங்கிலி அறப்போர் நடைபெற்றது.
அதன் ஒருபகுதியாக ஈரோட்டில் சமூகநீதி கூட்டமைப்பு ஒருங்கிணைத்த ஜனநாயக சக்திகள் பங்கேற்ற மனிதச்சங்கிலி அறப்போர் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வே.ரா.திருமகன், முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய சுப்புலட்சுமி ஜெகதீசன், தமிழ்நாடு மக்கள் உரிமை பேரவையின் ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் R.M.பழனிச்சாமி, SDTU தொழிற்சங்கத்தின் மாநில பொருளாளர் J.M.ஹசன் பாபு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம், மாவட்ட பொதுச்செயலாளர் குறிஞ்சி.பாஷா, மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் M.ஜமாலுதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.முனாஃப், ஈரோடு கிழக்கு தொகுதி தலைவர் H.அபூபக்கர் சித்தீக் உள்ளிட்ட தொகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment