நம்பியூரில் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சியில் காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 October 2022

நம்பியூரில் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சியில் காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம்,  நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தில் தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் கொங்கு மண்டல நாடார் உறவின் முறை சங்கம் சார்பாக  நம்பியூர் பஸ் நிலையம் அருகில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஏழைகளின் தலைவர் கல்வி தந்த கடவுள் பாமரனும் நாடாளுவான் என்று உலகிற்கு உணர்த்திய உத்தம பெருந்தலைவர் கு.காமராஜரின் அய்யாவின் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக நிறுவனத் தலைவர் பொன்.விஸ்வநாதன் நாடார், கொங்கு மண்டலம் நாடார் உறவின்முறை  சங்கத்தின் சார்பாக சாமி நாடார் செயலாளர் வடிவேல் நாடார்,நாடார் சங்க செயலாளர் தனபால் நாடார் ஆகியோர் கலந்து கொண்டு  காமராஜர் ஐயா அவர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து வீரவணக்கம் செய்தனர்,இந்த நிகழ்வில், நிர்வாகிகள் பொன்மணி நாடார், யுவராஜ் நாடார், சாரதி நாடார், செந்தில் நாடார், லட்சுமணன் நாடார், துரை நாடார், கௌரி சங்கர், சிதம்பரம் நாடார், கேசவன் நாடார், சிவா நாடார், ராஜா நாடார், பிரகாஷ் நாடார், பழனிசாமி நாடார், பண்ணீர் நாடார், தர்மன் நாடார், பாலாநாடார், ஆறுச்சாமி நாடார், லோகேஷ் நாடார், சசி நாடார், கருணாகரன் நாடார், கார்த்தி நாடார், காய்கறி செல்வம் நாடார், ஜஸ்வந்த் நாடார், அய்யாசாமி நாடார், ஆனந்தகுமார் நாடார், தேவராஜ் நாடார், வெள்ளிங்கிரி நாடார் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் சொந்தங்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மரியாதை  செலுத்தினார்கள்.


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment