ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கோணமூலை ஊராட்சி அக்கரை நெகமம் பகுதியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி.இளங்கோ தலைமையில் நடைபெற்றது.
உடன் கோணமூலை ஊராட்சி மன்ற தலைவரும், சத்தியமங்கலம் திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் குமரேஷ்(எ) செந்தில்நாதன் , துணைத் தலைவர் ஜெகதீசன், கிராம நிர்வாக அலுவலர், வார்டு உறுப்பினர்கள் ராதா, முருகாயாள், தாமரைச்செல்வி, சித்ரா, ஜனனி, மலர் மணி, மாரிமுத்து, கார்த்திகேயன் மற்றும் அனைத்துத் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment