பஞ்சமி நில மீட்பு கமிட்டி குழு உறுப்பினரும், நாகர் சேனை அமைப்பின் நிறுவன தலைவர் உயர்திரு அருங்கு விநாயகம் அய்யா ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரச்சலூர், அவல்பூந்துறை, வடுகபட்டி, ஞானபுரம், தச்சகட்டு வலசு, வினோபா கிராமம், கூத்தம்பட்டி, ஆகிய பகுதியில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு தமிழக அரசால் 2006 -ஆம் ஆண்டு முன்னாள் தமிழக முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அய்யா அவர்களால் வழங்கப்பட்ட தரிசு நிலங்கள் சுமார் 750 ஏக்கர் நிலத்தை பார்வையிட்டு உரிய மக்களுக்கு வழங்க தமிழக அரசால் ஆய்வுசெய்ய வருகை புரிந்தார்.
குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் குறிஞ்சி ப. சந்திரசேகரன் அவர்கள் தலைமையில் வரவேற்று சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தலைவர் தோழர் முனியப்பன், பாட்டாளி மக்கள் கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட தலைவர் நா.பழனிச்சாமி, முருகேசன், மொடக்குறிச்சி ஒன்றிய திமுக கவுன்சிலர் தோழர் சண்முகம் சமூக ஆர்வலர் துரைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment