தமிழகம் முழுவதும் திமுக அரசு ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து சனிக்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர், இந்நிலையில் ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நேற்று காலை 9 மணியளவில் தமிழக முதல்வர் திரு.மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக இளைஞரணி செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் (எம்.எல்.ஏ), அவர்களின் வழிகாட்டுதலின்பேரில் மாண்புமிகு வீட்டுவசதித் துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்களின் ஆலோசனையின்படி ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து ஈரோடு மாவட்ட இளைஞரணி & மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.ஈ பிரகாஷ் தலைமை வகித்தார், திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் திரு. செல்வராஜ்(எம் பி), சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் திரு.ஏ.ஜி வெங்கடாசலம், வடக்கு மாவட்டச் செயலாளர் திரு.நல்லசிவம், மாநில துணை கொள்கைப் பரப்புச் செயலாளர் சந்திரகுமார், மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி. சச்சிதானந்தம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் குறிஞ்சி திரு.என். சிவக்குமார், ஈரோடு மாநகராட்சி மேயர். சு. நாகரத்தினம், 1வது மண்டலத் தலைவர் பி.கே பழனிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
No comments:
Post a Comment