ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதி பழைய ரிஜிஸ்டர் ஆபிஸ் பேருந்து நிறுத்தம் அருகே கிருஷ்ணம்பாளையம் சாலையில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகில் இருக்கும் சாக்கடையில் பல நாட்களாக, குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்,இதர பொருள்கள், போன்ற சாக்கடையில் அடைத்து அங்கு தேங்கி நிற்கிறது, சாக்கடைக் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சாக்கடையிலிருந்து சில நேரங்களில் துர்நாற்றம் வீசுகிறது.
அருகிலேயே பேருந்து நிறுத்தம் இருப்பதால் இங்கு நிருக்கும் பொதுமக்கள் துர்நாற்றம் தாங்கமுடியாமல் முகம் சுளிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் மழை பெய்யும் நாட்களில் அங்கிருக்கும் சாக்கடையில் தண்ணீர் தேங்கி அதிகளவு நிற்கிறது இதனால் தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுநீரில் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் இருக்கிறது இதனால் உடனடியாக சாக்கடை தூர்வார சொல்லி அப்பகுதி பொதுமக்கள் ஈரோடு மாநகராட்சிக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
No comments:
Post a Comment