இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டாக்டர். அரவிந்த் கார்த்திக் - பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் மருத்துவ பிரிவு, திரு. எஸ். டி. செந்தில்குமார் - பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ஈரோடு தெற்கு மாவட்டம், டாக்டர். உமா சங்கர் பாஜக ஈரோடு தெற்கு மாவட்ட மருத்துவ அணி தலைவர், ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் வேதானந்தம் அவர்கள், அறம் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் திருமதி. கிருத்திகா ஷிவ்குமார் அவர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மண்டல தலைவர்கள் திரு. கணபதி, திரு. பிரகாஷ், திரு. சிவக்குமார் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் C K மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல், ஈரோடு கேன்சர் சென்டர், ஈரோடு ஐ ஃபவுண்டேஷன், விமலா பல் மருத்துவமனை மற்றும் லயன்ஸ் ரத்த வங்கி பங்கு பெற்றது. இம்முகாமில் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தவர்களுக்கு அறம் அறக்கட்டளையின் சார்பாக பழக்கன்றுகள் வழங்கப்பட்டது. முகாமில் சுமார் 300 நோயாளிகள் மருத்துவ ஆலோசனை பெற்று பயனடைந்தனர்.
- தமிழக குரல் இணையதள செய்தியாளர் பூபாலன்.
No comments:
Post a Comment