ஈரோட்டில் பாதாள சாக்கடைப் பணிகளை விரைந்து முடிக்க சொல்லி பொதுமக்கள் கோரிக்கை, ஈரோடு மாவட்டம் வைரபாளையம் அருள்நெறி பள்ளி அருகில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழிகளில் நேற்று பெய்த கனமழையால் மழைநீர் நிரம்பி வழிந்து சேறும் சகதியுமாக இருப்பதால் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் அச்சாலையில் செல்ல சிரமத்திற்கு ஆளாகிறார்கள், இரவு நேரங்களில் அவ்வழியில் செல்லும் மக்கள் இதில் தடுமாறி கீழே விழுவதற்கான வாய்ப்பு உள்ளதால் பணிகளை விரைந்து முடிக்க ஈரோடு வைராபாளையம் பகுதி பொதுமக்கள் ஈரோடு மாநகராட்சிக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
No comments:
Post a Comment