காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினரிடம் வாழ்த்து பெற்ற மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 October 2022

காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினரிடம் வாழ்த்து பெற்ற மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள்.

ஈரோடு மாவட்டம்,   தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளரும்,  ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் E.திருமகன் ஈவெரா MLA அவர்களை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஈரோடு மாநகர மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் N. ஆரிப் அலி அவர்கள் ஈரோடு மாநகராட்சி கிழக்கு சட்டமன்ற அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.


மேலும் நிகழ்ச்சியில் மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஷாருக்கான், விப்பின், நவீன் மாலிக், ரஃபி, தினேஷ்குமார், தீபன் குமார், சுரேந்தர், தவ்ஃபத், உமேஷ், விஜயகுமார், வினோத் குமார், முரளிதரன், பூவரசன், முத்துக்குமார், மோகன், ஈஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு MLA அவர்களுக்கு மாலை அணிவித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் முன்னாள் மாவட்ட தலைவர் E.R. ராஜேந்திரன், மண்டலத் தலைவர் விஜயபாஸ்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் முருகானந்தம், செந்தில் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர். 

- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment