ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , மாக்கினாங் கோம்பை ஊராட்சி குயவன் குழி சாலையில் மழை நீரானது வடியாமல் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மழைநீரை வெளியேற்ற கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி.இளங்கோ நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உடன் மாக்கினாங் கோம்பை ஊராட்சி மன்ற தலைவர் கே.ஈஸ்வரன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் விஸ்வநாதன் , கோணமூலை ஊராட்சி மன்ற தலைவரும் , சத்தியமங்கலம் திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் குமரேஷ்(எ) செந்தில்நாதன், திமுக நிர்வாகிகள் பூபதி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment