மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.சு. முத்துசாமி அவர்கள் தலைமையில் (27/10/2022) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஈரோடு மாவட்டத்தில் "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" (UTM) திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்களில் முக்கிய கோரிக்கை மனுக்களின் மீதான நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுக்கான மாவட்ட அளவிலான குழு கூட்டம் நடைபெற்றது.

உடன் மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.கிருஷ்ணன் உன்னி, சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஜி.வெங்கடாச்சலம் (அந்தியூர்) திரு.கே.ஏசெங்கோட்டையன், (கோபிசெட்டிபாளையம்), திரு.எஸ்.ஜெயக்குமார் (பெருந்துறை) திரு.ஏ.பண்ணாரி (பவானி சாகர்), திருமதி.சரஸ்வதி (மொடக்குறிச்சி ), கூடுதல் ஆட்சியர்/ திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ) திரு.லீ. மதுபாலன் அவர்கள் உட்பட பலர் உள்ளனர்.

No comments:
Post a Comment