ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பெரும்பள்ளம் அணையானது 40 அடி கொள்ளளவு கொண்டதாகும் தற்போது தொடர் மழையின் காரணமாக அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதன் காரணத்தினால் அணையின் பாதுகாப்பு கருதியும் அணையின் மதகுகளை நேரில் சென்று பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி பி.ஏ., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் சத்தியமங்கலம் வடக்கு அஇஅதிமுக ஒன்றிய கழக செயலாளர் சி.என்.மாரப்பன், கெம்பநாயக்கன்பாளையம் பேரூர் அஇஅதிமுக செயலாளர் எஸ்.கே.நடராஜ், அவைத் தலைவர் ராமசாமி, ராஜசேகர், பெரியசாமி, ஆனந்தன், சம்பத்குமார், ரஞ்சித்குமார், டாக்டர் சக்திவேல், ஸ்ரீனிவாசன், பாலச்சந்தர், பெரியசாமி, கொமராபாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நஞ்சப்பன், சென்னான், ஐயப்பன், ரங்கநாதன், வனக்குழு தலைவர் கே.கே.காளிப்பன், வழக்கறிஞர் கே.எஸ்.வெற்றிவேல், சத்தி வார்டு கழக செயலாளர் எஸ்.டி.காமேஷ், சுந்தர், அரியப்பம்பாளையம் ஆறுமுகம் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் ஆய்வின் போது உடன் இருந்தனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment