ஈரோடு மாவட்டம், அந்தியூர் தொகுதி, அத்தாணி பேரூராட்சியில் பேரூராட்சி துணை செயலாளரும் அத்தாணி பேரூராட்சி 15வது வார்டு உறுப்பினர் வேலு(எ) மருதமுத்து ஏற்பாட்டின் பேரில் அத்தாணி பேரூராட்சி திமுக 14வது வார்டு செயலாளர் மோகன் (எ)ஏ.ஏ.மோகன்ராஜ், தேமுதிக பேரூர் கழக பொருளாளர் முருகன் ஆகியோர் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் அஇஅதிமுக வில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் மோகன் குமார், கோபி வடக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சவுண்டப்பூர் எஸ்.எஸ்.ரமேஷ் , பேரூராட்சி 14வது உறுப்பினர் அறிவழகன் , பேரூர் கழக பொருளாளர் பாஸ்கர் , பேரூர் கழக இளைஞர் பாசறை செயலாளர் பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment