மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை பணியாளர்கள், பணிபுரிய தேவைப்படும் பொருட்களை வைத்து ஆயுதபூஜை கொண்டாடினார்கள். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 3 October 2022

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை பணியாளர்கள், பணிபுரிய தேவைப்படும் பொருட்களை வைத்து ஆயுதபூஜை கொண்டாடினார்கள்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகர் புது மாரியம்மன் கோயில் அருகில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை  பணியாளர்கள், தாங்கள் பணியரியும் பணிதளத்தில், பணிபுரிய தேவைப்படும் பொருட்களை வைத்து ஆயுதபூஜை கொண்டாடினார்கள். 


அவர்களின் விருப்பத்திற்கேற்ப கொமாரபாளையம்ஊராட்சி  மன்ற தலைவர் எஸ். எம். சரவணன்  கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார், உடன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ், வளர்ச்சிக்குழு உறுப்பினர் ராசு (எ) முனுசாமி, ஊராட்சி செயலாளர் குமார் மற்றும் நூறு நாள் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். 


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி 

No comments:

Post a Comment