ஈரோடு மாவட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு மற்றும் பிரதமந்திரி மக்கள் ஆரோக்ய திட்டம் ஆண்டு விழா ஈரோடு மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் கலந்து கொண்டு மருத்துவ காப்பீடு மற்றும் காப்பீடு அட்டை, விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் ஈரோடு பாரளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி அவர்கள், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் E.திருமகன் ஈவெரா அவர்கள், மாவட்ட ஆட்சியர் H.உன்னிகிருஷ்ணன் அவர்கள், மாவட்ட ஊராட்சி மன்ற குழு தலைவர் நவமணி கந்தசாமி, ஈரோடு மாநகராட்சி துணை மேயர் V.செல்வராஜ் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment