பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறான ஆக்கிரமித்துள்ள இடத்தை அகற்ற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 October 2022

பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறான ஆக்கிரமித்துள்ள இடத்தை அகற்ற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஈரோடு மாவட்டம்,  ஈரோடு மாநகராட்சி பகுதியான நெடுஞ்சாலை துறைக்கும்  பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும்  இடையூறான ஆக்கிரமித்துள்ள  இடத்தை அகற்ற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

வீரப்பன் சத்திரத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் தோழர் ரத்தினசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தோழர்.நிலவன் நீரோடை அவர்கள் தொடக்க  உரை யாற்றினார்.


இந்நிழ்ச்சியில் தமிழ்ச்செல்வன் தலைவர் தமிழர் கழகம் (கட்சி), மூத்த வழக்குரைஞர் தோழர்.ப.பா. மோகன் இந்திய கம்யூனிஸட் கட்சி, நீதிப்பேராணை தொடர்பாக நீண்ட உரையைப் பதிவு செய்தது அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்தது.


பங்கேற்று உரையாற்றிய தோழர்கள் குறிஞ்சி ப. சந்திரசேகரன் மாநில தலைவர் குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு.செயப்பிரகாசம் வழக்குரைஞர் புரட்சிகர இளைஞர் முன்னணி, இரா.சிந்தனைச்செல்வன் மாவட்டச் செயலாளர் தமிழ்ப் புலிகள் கட்சி  ஆறுமுகம் மஜஇக, ரவிச்சந்திரன் மக்கள் சிவில் உரிமை கழகம், குணசேகரன் மாவட்டச் செயலாளர் தமிழர் கழகம் (கட்சி) உள்ளிட்டவர்களுடன்திரளாகத் தோழர்கள் பங்கேற்றனர். 


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment