உழவனின் உழைப்பை உலகறிய வெளிச்சமிட்டு காட்ட ஜெய்ஹிந்த் பிக்சர் திரைப்பட நிறுவனம், தமிழக விவசாயிகள் நலப்பேரவை, கொங்கு கலாச்சாரப் பேரவை, நாடகம் மற்றும் நாட்டுப்புற கலை தமிழக உறுப்பினர்களின் பங்களிப்பில் உழவனே உயர்ந்தவன் எனும் புதிய திரைப்படத்திற்கு பெருந்துறை பிரசித்திபெற்ற முனியப்பன் கோயிலில் பூஜை போடப்பட்டது.
இந் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக நமது பெருந்துறை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜெயக்குமார், அடிப்படை மக்கள் உரிமைக்குரல் டாக்டர். ப. பாலசுப்பிரமணியம் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும் தயாரிப்பாளர் சேதுபதி, ஏ ஆர் எம் சம்பத், தளபதி சதாசிவம், ஜெகநாதன், விஜி, ராஜகோபால், மாணிக்கம், சுக்கிரன், முத்துச்சாமி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment