ஈரோடு ரயில் நிலையத்தில் இரண்டு முன்பதிவு கவுன்ட்டர்கள் காலை 8:00 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்தது தற்சமயம் இன்னொரு கவுன்ட்டர் இல்லாததினால் தீபாவளி பண்டிகை நேர காலத்தில் முன்பதிவு செய்ய வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் முன்பதிவு ரத்து செய்பவர்கள் கூட்டம் தினம் தினம் அதிகரித்துக் கொண்டுள்ளதால் பயணிகள் சொல்லண்ணா துயரம் அடைந்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் கிருஸ்த்துமஸ் பண்டிகை,புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகள் வர உள்ளதால் பயணிகளுக்கு சிரமம் இல்லாமல் டிக்கெட் எடுக்க வசதியாக ரயில்வே நிர்வாகம் கூடுதல் கவுன்ட்டர்களை திறக்க வேண்டும் என முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினரும் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே என் பாஷா ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை அனுப்பி உள்ளார்.

No comments:
Post a Comment