மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சூ முத்துசாமி அவர்கள் (03/10/2022) ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், மாண்புமிகு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் இணைந்து, செயல்படுத்தப்பட்டு, 4 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பயனாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அட்டைகளை வழங்கினார்.
உடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு ஹெச் கிருஷ்ணமணி அவர்களும் , ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.௮. கணேசமூர்த்தி , ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருஇ. திருமகன் ஈ.வே.ரா, மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் திருமதி. நவமணி கந்தசாமி, மரியாதைக்குரிய துணைமேயர் திருவே செல்வராஜ், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் திரு.விஜயகுமார் உட்பட பலர் உள்ளனர் .
No comments:
Post a Comment