ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றியம், கடத்தூர் ஊராட்சி, பள்ளிக்கூடம் பிரிவு பகுதியில் நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளர், நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் ப செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில் கடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.ராணி சிதம்பரம் அவர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர் திருமதி. கோமதி செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் MGNREGS 2020-2021, 2021 - 2022 பணிகளின் கீழ் சின்னச்சாமி வீடு முதல் புது மாரியம்மன் கோவில் வரை புதிய கான்கிரீட் சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழாவானது நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது ஊராட்சி மன்ற துணை தலைவர் ரங்கநாதமூர்த்தி, நம்பியூர் பேரூராட்சி அவைத்தலைவர் சுப்பிரமணியம் அவர்கள், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஆர்.பி.எஸ். பழனிச்சாமி அவர்கள், முன்னாள் ஒன்றிய கழக துணை செயலாளர் மைக்.பழனிச்சாமி அவர்கள் மற்றும் கிளை கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment