மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட எழுமாத்தூர் பகுதியில் ஜல்ஜீவன் கூட்டு குடிநீர் திட்டம் பிரிவு III - ன் கீழ் கட்டப்பட்டு வரும் நீர் தேக்க தொட்டி மற்றும் எழுமாத்தூர், விளக்கேத்தி, காகம், குலவிளக்கு, பழமங்கலம் கிராம ஊராட்சிகளின் நீர் தேக்க தரைமட்ட தொட்டிகள், மேல்நிலைத் தொட்டிகள், குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் மற்றும் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் திரு. கணபதி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எழுமாத்தூர் பகுதியில் உள்ள ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் புதிதாக 15 தரைமட்ட நீர் திறக்க தொட்டிகள் மற்றும் 98 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது.
நடைபெற்ற ஆய்வில் ஜல்ஜீவன் கூட்டு குடிநீர் திட்ட உதவி பொறியாளர் வாசுதேவன், உதவி நிர்வாக பொறியாளர் வி.ரேவதி, ஆர். வாட்டர் இன்ஃப்ரா ஒப்பந்ததாரர் திட்ட மேலாளர் வினோத் மற்றும் அதிகாரிகள், உள்ளூர் பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க நமது சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் அறிவுறுத்தினார்
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மொடக்குறிச்சி சக்திவேல்.
No comments:
Post a Comment