ஈரோட்டில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 12 October 2022

ஈரோட்டில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது.

ஆா்எஸ்எஸ் அமைப்பை தடை செய்யக்கோரியும், தமிழகத்தில் மதவாத, வகுப்புவாத, பிரிவினைவாத சக்திகளை அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது அதன்படி தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலி செவ்வாய்க்கிழமை மாலை நடந்தது. ஈரோடு பன்னீா்செல்வம் பூங்காவில் நடந்த மனித சங்கிலியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி, மதிமுக உள்பட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள்  பங்கேற்றனா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறியாளா் அணி மாநில துணைச்செயலாளா் எஸ்.எம்.சாதிக் தலைமை வகித்தாா்.

ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி, எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா, முன்னாள் மத்திய அமைச்சா் சுப்புலட்சுமி ஜெகதீசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளா் சிறுத்தை வள்ளுவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பல்வேறு கட்சியினா் ஈரோடு காந்திஜி சாலை, மீனாட்சி சுந்தரனாா் சாலை ஆகிய சாலைகளில் கைகோா்த்தபடி நீண்ட வரிசையில் நின்றனா். மனிதச் சங்கிலியில் காங்கிரஸ் கட்சியின் மாநகா் மாவட்டப் பொறுப்பாளா் திருச்செல்வம், தெற்கு மாவட்டச் செயலாளா் மக்கள் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆா்.எம்.பழனிசாமி, வழக்குரைஞா் பிரிவு மாநிலச் செயலாளா் ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளா் எஸ்.டி.பிரபாகரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளா் ரகுராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். 

No comments:

Post a Comment