ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றியம், கெட்டிச்செவியூர் ஊராட்சி, சாஸ்த்திரி நகர் பகுதியில் பொது மக்களின் அடிப்படை பிரட்சனைகளான சாலைகள் மற்றும் அங்கன்வாடி அருகே அமைந்துள்ள கிணற்றிக்கு கம்பி வேலி அமைத்து, குழந்தைகளை பாதுகாக்கவும், ஊரின் நடுவே அமைந்துள்ள (நாகம்மாள் வீடு அருகே) கிணற்றிற்கு மூடி போடவும், மற்றும் தெரு மின் விளக்குகள் அமைக்கவும் நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளரும், நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவர் மெடிக்கல் ப.செந்தில்குமார் நேரில் பார்வையிட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு விரைவில் பணிகளை முடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

விரைவில் அனைத்து அடிப்படை பிரட்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார். இந்நிகழ்வின் போது சாஸ்த்திரி நகர் தி.மு.க கிளை கழக செயலாளர் முருகன் அவர்கள், ரமேஷ் அவர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன்மூர்த்தி.

No comments:
Post a Comment