ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமராபாளையம் ஊராட்சி அங்கனகவுண்டன் புதூரில் MGNREGS திட்டத்தில் ஊராட்சி நாற்று பண்ணைகள் அமைத்தல் தொடர்பான ஒரு நாள் பயிற்சி சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும் சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி.இளங்கோ தலைமையில் நடைபெற்றது.

உடன் கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் திரு. சரவணகுமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு.ரமேஷ், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி.சத்யா பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்(வஊ) திரு. சுப்பிரமணியம், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ) திரு.பிரேம்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.செந்தில்குமார்,உதவி பொறியாளர் திரு. இளங்குமரன், பணி பார்வையாளர் திருமதி. கலைவாணி, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் திருமதி. சாந்தி மற்றும் மகளிர் திட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:
Post a Comment