அதனைத் தொடர்ந்து 17.11.22 இன்று மொடக்குறிச்சி வட்டார வளமையத்திற்கு உட்பட்ட நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான, ஆயத்த மற்றும் ஆலோசனைக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மொடக்குறிச்சி, பள்ளி வளாகத்தில், வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி வனிதாராணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் திருமதி. ஜோதிசந்திரா அவர்கள் கலந்து கொண்டு கலைத்திருவிழா சிறப்பாக நடைபெறத் தேவையான ஆலோசனைகளை வழங்கினார். போட்டிகள், பள்ளி அளவில் 23.11.22 முதல் 28.11.22 ஆம் தேதிக்குள்ளாகவும், வட்டார அளவில் 29.11.22 முதல் 5.12.22 ஆம் தேதிக்குள்ளாகவும், மாவட்ட அளவில் 6.12.22 முதல் 10.12.22 ஆம் தேதிக்குள்ளாகவும் மாநில அளவில் 03.01.23 முதல் 09.01.2023க்குள்ளாகவும் நடைபெற இருப்பதால் குழந்தைகளை முறையாக பயிற்றுவித்து போட்டியில் பங்கு பெற தேவையான வழிகாடுதல்கள் தெரிவிக்கப்பட்டது.
வட்டாரக் கல்வி அலுவலர் திரு சுரேஷ், மொடக்குறிச்சி வட்டார வளமைய மேற்பார்வையாளர் திருமதி சுதா ஆகியோர் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெடுப்புகள் குறித்து விளக்கிக் கூறினர், கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆசிரியர் பயிற்றுனர்கள், கீதா, தீபா, சங்கீதா, மாணிக்க ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

No comments:
Post a Comment