ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக சுதந்திரப் போராட்ட தியாகியும் கப்பலோட்டிய தமிழனுமான வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் 86வது நினைவு நாள் இன்று 18/11/2022 காலை 11 மணிக்கு ஈரோடு கருங்கல்பாளையம் ரங்கபவனத்தில் உள்ள வ உ சிதம்பரம் பிள்ளை நினைவு திடலில் உள்ள அவரது உருவ சிலைக்கு ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆர்.கே.பிள்ளை மாலை அணிவித்து மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் டி திருச்செல்வம் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் ஈ ஆர் ராஜேந்திரன், மண்டலத் தலைவர் எச்.எம்.ஜாபர் சாதிக்,முன்னாள் மாமன்ற உறுப்பினர் புனிதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ. மாரியப்பன், மாவட்ட துணைத்தலவர் அம்மன் மாதேஷ், பொது செயலாளர் இரா.கனகராஜன், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ம.முகமது அர்சத்,ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் சூர்யா சித்திக் மற்றும் பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.


No comments:
Post a Comment