அஇஅதிமுக சார்பில் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 13 November 2022

அஇஅதிமுக சார்பில் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம்.


ஈரோடு மாவட்டம்,  பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலத்தில் அஇஅதிமுக சார்பில் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட  செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன்  தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ. பண்ணாரி முன்னிலை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில் சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சி.என்.மாரப்பன், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் என்.என்.சிவராஜ், சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.எம்.எஸ்.நாச்சிமுத்து, சத்தியமங்கலம் நகர செயலாளர் ஓ.எம்.எஸ்.சுப்பிரமணியம், அரியப்பம்பாளையம் பேரூராட்சி செயலாளர் பி.என்.தேவமுத்து, கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி செயலாளர் எஸ்.கே.நடராஜ், பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிசாமி, பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் டி.எஸ்.பழனிசாமி, பவானிசாகர் பேரூராட்சி செயலாளர் கே.செல்வன், தாளவாடி மேற்கு ஒன்றிய செயலாளர் பி. மாதேஸா  தாளவாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆசனூர் சுப்பிரமணியம், தாளவாடி தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.சதீஸா, புன்செய் புளியம்பட்டி நகர செயலாளர் ஜி.கே.மூர்த்தி,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.கே.காளியப்பன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் வி.சத்தியபாமா, மாவட்ட அவைத்தலைவர் பி.சிதம்பரம்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.டி.சரஸ்வதி, மாவட்ட வார்த்தக அணி செயலாளர் எஸ்.ஆர்.பி.வெங்கிடுசாமி , மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் வி.பி.தமிழ்செல்வி,  கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன், முன்னாள் அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவர் எம்.பி.துரைசாமி மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி 

No comments:

Post a Comment