ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் எண்ண மங்கலம் ஊராட்சி செல்லம் பாளையம் 1 வது வார்டில் கான்கீரிட் சாலை அமைக்கும் பணி அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது.

மேலும் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கான கழிப்பிட வசதி சத்துணவு மையத்தின் பராமரித்து பணி சுற்றுச்சுவர் பணி ஆகிய பணிகளை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் ஊராட்ச
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சாமுவேல், ஊராட்சி மன்ற தலைவர் மயில் கந்தசாமி, துணைத் தலைவர் சங்கீதா பாலகிருஷ்ணன், 1வதுவார்டு கவுன்சிலர் குமுதாவெங்கடேஷ், 11வது வார்டு கவுன்சிலர் சுகுமார், 3வது வார்டு கவுன்சிலர் கணபதி, பெற்றோர் சங்கத் தலைவர் முருகேஷ், ஒன்றிய கவுன்சிலர் தாமரைச்செல்வி மகேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் என் நரசிம்மமூர்த்தி


No comments:
Post a Comment