ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஒன்றியம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ.ஏதேவராஜ் தலைமையில் ராஜன்நகர் ஊராட்சியில் உள்ள கஸ்தூரிபா நிகேதன் பள்ளி விடுதியில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இதில் விடுதியில் உள்ள மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கியும், அவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகம், பேனா, பென்சில், ஸ்கேல் ஜாமென்ட்ரி பாக்ஸ், தண்ணீர் கேன், பைல் உள்ளிட்ட பொருட்கள் வழங்கினார்கள்.
இதில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நவீன் குமார் ஆதிதிராவிடர் குழு ஒன்றிய அமைப்பாளர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment