ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , சதுமுகை ஊராட்சி அண்ணா சிட்டி 2 ஆவது வீதியில் ஒன்றிய பொது நிதி ரூ.5.60லட்சம் மதிப்பீட்டில் காங்கிரட் தளம் அமைப்பதற்கு பூமி பூஜை சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி.இளங்கோ தலைமையில் போடப்பட்டது.

உடன் சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ.ஏ.தேவராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் பற்குணன், வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் புதுகுய்யனூர் சுப்ரமணியம் மற்றும் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சி. ஆர்.செல்வராஜ், சேகர், ஒண்டியூர் ஆறுச்சாமி, நடுபாளையம் திருமூர்த்தி, தங்கராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment