மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கோரிக்கையின் படி புதிதாக நவீன உடற்பயிற்சி கூட பூமி பூஜை. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 25 November 2022

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கோரிக்கையின் படி புதிதாக நவீன உடற்பயிற்சி கூட பூமி பூஜை.


ஈரோடு மாவட்டம்,   ஈரோடு மாநகராட்சி மண்டலம் இரண்டில் அமைந்துள்ள ராஜாஜிபுரம் பகுதியில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கோரிக்கையின் படி புதிதாக நவீன உடற்பயிற்சி கூடம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் ஒதுக்கீட்டில்   ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் E.திருமகன் ஈவெரா பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணி, ஈரோடு  மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மாவட்ட துணை தலைவர் பா.ராஜேஷ் ராஜப்பா, மண்டல தலைவர்கள் ஆர். விஜயபாஸ்கர், அல்டிமேட் தினேஷ், சசிகுமார், திமுக இரண்டாம் மண்டல தலைவர் காட்டு சுப்பு என்கிற சுப்பிரமணி, ஈரோடு மாநகராட்சி வார்டு  உறுப்பினர் தீபலட்சுமி அண்ணாதுரை, திமுக பகுதி செயலாளர் பொ.ராமச்சந்திரன், வார்டு நிர்வாகி மஸ்தான் பாய், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ. மாரியப்பன், வி .எம் .கே. செந்தில் ராஜா, ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் செந்தூர் ராஜகோபால், மாநகர் மாவட்ட ஊடக பிரிவு தலைவர் ம.முகமது அர்சத்,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில எஸ் சி துறை துணைத் தலைவர் குளம் எம் ராஜேந்திரன், டி எம் ஐ சபீர் அலி, பாலதண்டாயுதம், ராஜாஜிபுரம் காங்கிரஸ் நிர்வாகிகள் சிவா, சக்தி குமரேசன், ஒன்றாம் மண்டல துணைத் தலைவர் வெற்றிச்செல்வன் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில்  கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment