அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க கழக துணை பொதுச்செயலாளர், மண்டல பொறுப்பாளர், திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னால் அமைச்சர் சண்முகவேல் அவர்கள் தலைமையில் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிவபிரஷாந்த் முன்னிலையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட கழகம், பகுதி கழக, ஒன்றிய கழக, சார்பு அணி, பேரூர் கழக, ஊராட்சி கழக, வட்ட கழக செயலாளர்கள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து தங்களின் பல்வேறு விதமான கருத்துக்களை கூட்டத்தில் தெரிவித்தனர். அனைவருடைய கருத்துக்களை ஏற்றுக் கொண்டு இக்கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அவர்களுடைய பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளை கழகத் தொண்டர்கள் சிறப்பாக நடத்த வேண்டி ஆலோசனை செய்யப்பட்டது.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நினைவு நாளை அனுசரிப்பது பற்றியும், புதிய வாக்காளர்கள் சேர்ப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இது போன்று இக்கூட்டத்தில் பல்வேறு வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

No comments:
Post a Comment