ஈரோடு மாவட்டம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள கோட்டைப்பகுதி முத்துசாமி வீதி அங்கன்வாடி மைய ஆசிரியைகள் கடந்த மாதம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் E.திருமகன் ஈவெரா அவர்களை சந்தித்து 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் அங்கன்வாடியில் பயிலுவதாகவும், குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கவும், உணவுகள் தயாரிக்கவும் போதிய இடவசதி இன்றி சிரமப்படுவதாகவும்கோரிக்கை வைத்தார்கள்.
இதனை ஏற்று ஈரோடு மாநகராட்சி நாச்சியப்பா வீதி (சிலம்பரான் குட்டை) சின்ன மார்க்கெட் வளாகத்தில் உள்ள கட்டிடங்களை ஒதுக்கீடு செய்து கொடுத்து, குத்துவிளக்கேற்றி வைத்து அங்கன்வாடி மையம் செயல்பட நடவடிக்கை எடுத்தார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளார் T.திருச்செல்வம், மாவட்ட துணை தலைவர் B.ராஜேஷ் ராஜப்பா, இரண்டாம் மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி


No comments:
Post a Comment