ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் ஈரோடு மணல்மேடு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 11 November 2022

ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் ஈரோடு மணல்மேடு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் இலக்கியச் செல்வன் தலைமையில் கட்சி அலுவலகத்தில்  நடைபெற்றது. 


இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் திரு லெனின் பிரசாத் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் தமிழ்நாடு பொறுப்பாளர் திரு சர்வன் ராவ் அவர்கள்  மாவட்ட தலைவர் டாக்டர் மக்கள் ஜி ராஜன்  ஆகியோர் அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். 

மேலும் இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் சிந்துஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியம், மாவட்ட பொருளாளர் முத்துக்குமார், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர்கள் சந்தான பாரதி, பிரதேஷ், பொதுச் செயலாளர் அரவிந்த், சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மொடக்குறிச்சி பிரபு, பவானி பூபதி, சுதர்சன் சுரேந்தர் மாநிலச் செயலாளர் விஜய் வேம்பரசன் வட்டார தலைவர் சண்முகம் பேரூர் தலைவர் வேலுச்சாமி பெருந்துறை கவுன்சிலர் நஸ்ரியா பேகம் எஸ்சி எஸ்டி பிரிவு துணைத் தலைவர் பன்னாரி செந்தில் பிரகாஷ் விமல் அரவிந்த் சிவனேசன் பிரபுதாஸ் குமரேஷ் வெங்கடேஷ் செந்தமிழ் செல்வன் திருக்குமரன் பிரபாகரன் சசிகுமார் செந்தில்வேல் ஈஸ்வரமூர்த்தி ரவி சுதர்சனம் உள்ளிட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


இந்த நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இனி வரக்கூடிய நாட்களில் இளைஞர்கள் பூத் கமிட்டியை நோக்கி ( யூத் ஜூடோ பூத் ஜூடோ)  என்ற வாசகத்தை முன்னெடுத்து, பூத் வாரியாக இளைஞர்களை சேர்க்க வேண்டும், மேலும் இளைஞர் காங்கிரஸ் வலு சேர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஈரோடு தெற்கு மாவட்ட பகுதிகளில் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. நிறைவில் மொடக்குறிச்சி சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபு நன்றியுரை ஆற்றினார்.

No comments:

Post a Comment