கொத்தமங்கலம் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை MLA பங்கேற்பு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 11 November 2022

கொத்தமங்கலம் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை MLA பங்கேற்பு.


ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொத்தமங்கலம் ஊராட்சியில் 15வது நிதி குழு மானிய மேம்பாட்டு நிதியிலிருந்து  

  1. வெள்ளியம்பாளையம் புதூர் பகுதியில் (2லட்சம்) மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைப்பதற்கான பூமி பூஜை.
  2. கொத்தமங்கலம் மற்றும் பாரதி நகர் பகுதியில் தலா (9லட்சம்) மதிப்பீட்டில் 20000லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல்.
  3. நெருஞ்சிப்பேட்டை பகுதியிலிருந்து ராஜீவ் நகர் பகுதிக்கு (3.5லட்சம்) மதிப்பீட்டில் குழாய் அமைத்தல்.
  4. பகுத்தம்பாளையம் பகுதியில் (7.5லட்சம்) மதிப்பீட்டில் கான்கிரீட் தளம்.

அமைப்பதற்கான பணியை பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினரும்,  அனைத்து உலகை எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்  அ.பண்ணாரி.பி.ஏ., பூமி பூஜை செய்து கட்டுமான பணியினை துவக்கி வைத்தார். 


இந்த நிகழ்ச்சியில் கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா, ஊராட்சி மன்ற துணை தலைவர் சண்முகம், பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிச்சாமி, பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் டி.எஸ்.பழனிச்சாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தங்கராஜ், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்  பழனிச்சாமி, பவானிசாகர் வடக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர்  பங்க் ரவி, பி.ஏ.பி.பொன்னுசாமி, ராஜன், கோவிந்தராஜன், அஇஅதிமுக கிளைச் செயலாளர்கள் மாணிக்கம், பன்னீர், துரை, சின்னப்பன், மணி மற்றும் அஇஅதிமுக  நிர்வாகிகள் பொதுமக்கள் நிகழ்வில் பெருந்திரளாக கலந்து கொண்டனர். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி 

No comments:

Post a Comment