குறிஞ்சியார் மக்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் குறிஞ்சி ப. சந்திரசேகரன் தலைமையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகம் சத்தியமூர்த்தி பவனின் காங்கிரஸ் தமிழக மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி அவர்களிடம் தமிழக பூர்வகுடி தமிழ் குறவர்களின் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத மூன்று அம்ச கோரிக்கையை நாடாளுமன்றத்திலும் தமிழக சட்ட மன்றத்திலும், காங்கிரஸ் கட்சியின் சார்பாக நிறைவேற்ற சொல்லியும், மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

கோரிக்கையை கருணையுடன் கேட்டுக் கொண்டு கண்டிப்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக கடிதம் அனுப்புவதாக உறுதி அளித்துள்ளார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தமிழக சட்டமன்ற தலைவரும் , சட்டமன்ற கணக்கீடு குழு உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர் மக்கள் ராஜன், குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு மாநில இளைஞரணி தலைவர் A. N. ஜெயச்சந்திரன், மாநில ஆலோசகர் வீரமுத்து, ஈரோடு மாநகர மாவட்ட தலைவர் ஆறுமுகம், மாநகர நிர்வாகிகள் வசந்தகுமார் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment