மொடக்குறிச்சி வட்டார வளமையம் சார்பில் கடந்த (16.11.22) உலக மாற்றுத்திறனாளிகள் தின செயல்பாடுகளில் ஒன்றான மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பேரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி பொன்மொழி தலைமையில் நடைபெற்றது.

மொடக்குறிச்சி வட்டார வளமைய மேற்பார்வையாளர் திருமதி சுதா முன்னிலை வகித்தார். மொடக்குறிச்சி பேரூராட்சித் தலைவர் திருமதி செல்வாம்பாள், சரவணன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு , பேரணியை கொடியசைத்து துவக்கிவைத்தார்.
இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன், விழிப்புணர்வு முழக்கமிட்டு ஊர்வலம் சென்றனர். விழிப்புணர்வு ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் பாலாஜி, ஸ்ரீதர், கல்பனா நாகேஸ்வரி , சிவன் , ஆகியோர் செய்திருந்தனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பூபாலன்

No comments:
Post a Comment