இந்நிகழ்வில் ஒரு பகுதியாக இன்று நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி குமாக்காளிபாளையம் அரசு பள்ளியிலும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ் மற்றும் நம்பியூர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கப்பட்டது.

அரசு உயர்நிலைப்பள்ளி குமக்காளிபாளையத்தில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கமலா தொடங்கி வைத்தார். பேரணியில் சுமார் 150 மாணவர்கள் இரு பள்ளிகளிலும் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கிடைக்கும் சலுகைகள் குறித்து கோஷம் எழுப்பி,துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
பேரணிக்கான ஏற்பாடுகளை நம்பியூர் ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்பாளர் மெய்யப்பன், நம்பியூர் ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பயிற்றுனர்கள் ஆனந்தி, மஞ்சுநாதன், பிரமிளா டிட்டி, ரேவதி சத்தியதீபா ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

No comments:
Post a Comment