இவ்விழாவில் ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட 32 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆற்றல் மன்றம் உருவாக்குவதற்காக தலா ஒரு ஒருங்கிணைப்பாளரை(ஆசிரியர்)தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஓரு நாள் பயிற்சி வகுப்பு வழங்கப்பட்டது. அதில் வீடுகள் வணிகம் மற்றும் பள்ளிகளில் மின் மேலாண்மை மின் சிக்கனமும் குறித்தும் சோலார் மின்சாரம் பயன்படுத்துவது குறித்தும் பள்ளி குழந்தைகளிடையே மின்பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும் மின்சார உபகரணங்களை கையாழ்வது குறித்தும் மற்றும் மழை காலங்களில் பாதுகாப்பாக மின்சார சாதனங்களை இயக்குவது குறித்தும் சோலார் மின்சாரம் பயன்பாடு குறித்தும் ஆற்றல் மன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது இந்நிகழ்வில் ஈரோடு மின் பகிர்மான வட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து 32 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். பயிற்சி வகுப்பின் முடிவில் ஆசிரியர்களுக்கு மின் சிக்கன விளக்க கையேடு மற்றும் குழந்தைகளுக்கு துண்டுபிரசுரங்கள் மற்றும் 32 பள்ளிகளுக்கு ஆற்றல் மன்றம் பெயர் பலகை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர்கள் பொறிஞர்.சா.முத்துவேல் செயற்பொறியாளர் தெற்கு ஈரோடு பொறிஞர்.செ.ராமசந்திரன் செயற்பொறியாளர் நகரியம் ஈரோடு மற்றும் பொறிஞர். பா.வாசுதேவன் செயற்பொறியாளர் பெருந்துறை மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியாக செயற்பொறியாளர் பொது சூ.மரியா ஆரோக்கியம் அவர்கள் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment