ஈரோடு மாவட்டம், ஈரோட்டில் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் இந்தி மொழியை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே SDPI கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் E.திருமகன் ஈவெரா, SDPI கட்சியின் மாநில செயலாளர் A.அபூபக்கர் சித்திக் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

ஈரோடு மாவட்ட SDPI கட்சி தலைவர் முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளார் T.திருச்செல்வம், மாவட்ட துணை தலைவர் B.ராஜேஷ் ராஜப்பா, ஈரோடு கிழக்கு தொகுதி SDPI தலைவர் H.அபுபக்கர் சித்திக், மாவட்ட செயற்குழு உறுப்பினர் SDPI கட்சி க.முனாஃப், தமிழ்நாடு மக்கள் உரிமை பேரவை ஒருங்கிணைப்பாளர் தோழர் கண.குறிஞ்சி, தி.வி.க.இந்திய பிரியங்கன், மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் விஜயபாஸ்கர்,ஜாபர் சாதிக்,சசிகுமார், அல்டிமேட் தினேஷ் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அமைப்பு தலைவர்கள் நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment