ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ராஜன்நகர் ஊராட்சியில் பட்டதரசி அம்மன் கோவில் முதல் மெயின் ரோடு வரை 15 ஆவது நிதி குழு மானியம் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி.இளங்கோ தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது.

உடன் ஒன்றிய குழு துணைத் தலைவர் சுப்புலட்சுமி சுப்பிரமணி, ஒன்றிய குழு உறுப்பினர் கவிதா செல்வன், ராஜன் நகர் ஊராட்சி மன்ற தலைவர் சந்திராமணி செல்வன், கோணமூலை ஊராட்சி மன்ற தலைவரும், சத்தியமங்கலம் தெற்கு திமுக ஒன்றிய பொருளாளர் குமரேஷ்(எ) செந்தில்நாதன், ஊராட்சி வார்டு உறுப்பினர் சக்திவேல் மற்றும் திமுக நிர்வாகிகள் நவீன், குணசேகரன், சிவா ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment