எச். ஐ. வி /எய்ட்ஸ், பால்வினை நோய் மற்றும் இரத்த தானம் குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 23 November 2022

எச். ஐ. வி /எய்ட்ஸ், பால்வினை நோய் மற்றும் இரத்த தானம் குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி.

ஈரோடு மாவட்டம்,  நம்பியூர் ஊராட்சி ஒன்றியம், நம்பியூர் பேருந்து நிலையத்தில்  தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் வழிகாட்டுதலின் பேரில் ஈரோடு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மற்றும் கேர்-தொடர்பு பணியாளர் திட்டம் ஆகியவை இணைந்து எச். ஐ. வி /எய்ட்ஸ், பால்வினை நோய் மற்றும் இரத்த தானம் குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் செம்பருத்தி கலைக்குழு மூலம் ஆடல், பாடல், ஒயிலாட்டம், நாடகம் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. 


IEC ஸ்டால் மூலம் எச் ஐ. வி /எய்ட்ஸ், பால்வினை நோய், இரத்ததானம் குறித்து துண்டு பிரசுரங்களை கேர்- தொடர்பு பணியாளர் திட்ட  பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது. ஒழலக்கோயில் ஊராட்சித்தலைவர் வசந்தி பெரியசாமி, துணைத்தலைவர் சின்னச்சாமி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் அமுதா கண்ணன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை ஆற்றுநர் ரமேஷ், நம்பியூர் நம்பிக்கைமைய ஆய்வக நுட்புனர் புவனேஷ்வரி, மாவட்ட வள அலுவலர் அழகுராஜா, நடமாடும் நம்பிக்கைமைய பணியாளர்கள் கோமதி, சுரேஷ் மற்றும் கேர் - தொடர்பு பணியாளர்கள் கலாமணி, நந்தினி ஆகியோர்  கலந்து கொண்டனர். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி 



No comments:

Post a Comment