ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கடம்பூர் பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு பவானிசாகர் சட்ட மன்ற உறுப்பினர் அ.பண்ணாரி.பி.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

இதில் சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளரும், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் என்.எம்.எஸ்.நாச்சிமுத்து, சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சி.என்.மாரப்பன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டி.பிரபாகரன், பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிசாமி மற்றும் குத்தியாலத்தூர் ஊராட்சி அஇஅதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment