கொடுமுடி அருகில் வெள்ளோட்டம் பரப்பு பேருராட்சிக்கு உட்பட்டது பெரியூர். இங்கு கடந்த 2006 ஆம் ஆண்டு நானூறு மீட்டர் தூரத்துக்கு 12 லட்சம் மதிப்பில் கழிவு நீர் செல்லும் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டது. இதில் விடப்படும் கழிவு நீர் வாய்க்கால் துண்டுக் காட்டூர் என்ற இடத்தில் முடிகிறது. இதற்கு அடுத்து தனியார் இடம் உள்ளதால் கழிவு நீர் செல்ல வழியில்லை. இதனால் கழிவு நீர் அனைத்தும் வடிகால் வாய்க்காலிலேயே தேங்கி நிற்கிறது.

இது குறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்களிடம் மனு கொடுத்தனர். சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று ஆய்வு செய்தார்கள். ஆய்வுக்குப் பின் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை படி கூடிய விரைவில் அதனை முடித்து தருவதாக உறுதி அளித்தார்கள். அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்களும், வெள்ளோட்டாம்பரப்பு பேரூராட்சி செயல் அலுவலர் விஜயன், பாரதிய ஜனதா கட்சியின் கொடுமுடி கிழக்கு ஒன்றிய தலைவர் கார்த்திகேயன் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் உடன் இருந்தார்கள்.

No comments:
Post a Comment