கோழிப்பண்ணையில் சுகாதாரக் கேடு - மொடக்குறிச்சி எம். எல். ஏ ஆய்வு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 November 2022

கோழிப்பண்ணையில் சுகாதாரக் கேடு - மொடக்குறிச்சி எம். எல். ஏ ஆய்வு.

மொடக்குறிச்சி வட்டம், பூந்துறை சேமூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கோழி பண்ணையில் சுகாதாரக் கேடு நிலவுவதால் சுற்றுவட்டார பகுதிகளில் ஈக்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக கடந்த ஆறு மாத காலமாகவே பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் பொதுமக்கள் கோழிப்பண்ணையை மூட வேண்டும் என்று போராட்டம் நடத்தியதில் அப்போது மொடக்குறிச்சி தாசில்தார் சண்முகசுந்தரம் மற்றும் அதிகாரிகள் கோழிப் பண்ணையை ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்கு பொதுமக்கள் சார்பில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு கோழி பண்ணையில் சுகாதாரம் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தொடர்ந்து அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஈக்கள் தொல்லை முன்பு இருந்ததை விட அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கடந்த வாரம் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளித்தனர். இது குறித்து தகவல் அறிந்த மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் மற்றும் ஒன்றிய குழு பெருந்தலைவர் கணபதி, சுகாதார துறை சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் மற்றும் அதிகாரிகள் இன்று 09.11.2022 புதன்கிழமை மாலை 4 மணியளவில் பூந்துறை சேமூர் மாரியம்மன் கோயில் திடலில் அந்தப் பகுதி மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.


இதில் பொதுமக்கள் கோழிப்பண்ணையால் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் சமைத்து வைத்துள்ள உணவுகளில் விழுந்து சுகாதார கேடு நிலவுகிறது, தூங்க முடிவதில்லை மேலும் கால்நடைகள் மற்றும் வீடுகளில்  குவியல் குவியலாக ஈக்கள் தொல்லை உள்ளதாகவும் கோழிப்பண்ணைக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் கண்டுகொள்ளாததால் கோழி பண்ணையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்  மற்றும் ஒன்றிய குழு தலைவர் அவர்களிடம் வலியுறுத்தினர். இல்லையெனில் சாலை மறியல் செய்வோம் என்று தெரிவித்தனர். இதனை அடுத்து பண்ணை அருகில் உள்ள வீடுகளில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் கள ஆய்வில் ஈடுபட்டனர். குவியல் குவியலாக ஈக்கள் வீடுகளில்  இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ பொதுமக்களிடம் கூறியதாவது:


"வருகின்ற 15ஆம் தேதி மாலை 3 மணி அளவில் மொடக்குறிச்சி வட்டாட்சியர்  அலுவலகத்தில் சுகாதாரம் குறித்த அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு அனைத்து அதிகாரிகள் முன்னிலையில் பொதுமக்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதில் கோழி பண்ணையை சுகாதாரமாக பராமரிக்காவிட்டால் மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்". இதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். அரச்சலூர் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நடைபெற்ற நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment