துவக்க பள்ளியில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ ஆய்வு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 November 2022

துவக்க பள்ளியில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ ஆய்வு.


மொடக்குறிச்சி ஒன்றியம், முத்து கவுண்டன் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் இயங்கி வரும் அரசு துவக்க பள்ளியில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி  ஆய்வு மேற்கொண்டார்கள். அவர்களுடன் ஒன்றிய குழு பெருந்தலைவர் கணபதி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது அப்பகுதி மக்கள் கூறியதாவது:

பெரியார் நகர் பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 45க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வந்தனர். ஆனால் போதிய இடவசதி இல்லாததால் தற்போது 14 குழந்தைகள் மட்டுமே பயின்று வருகின்றனர். இங்கு இருக்கும் பள்ளி கட்டிடம் தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடம் ஆகும். இங்கு இடவசதி இல்லாததால் எங்கள் குழந்தைகள் படிக்க போதிய வசதியுடன் கூடிய பள்ளிக்கூடம் அமைக்க இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.அப்போது சட்டமன்ற உறுப்பினர்  கூறியதாவது:


பெரியார் நகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான காலியிடம் எதுவும் இல்லாததால் இப்பள்ளிக்கு வேறு கட்டிடம் கட்ட முடியாத நிலை உள்ளது. இதற்கு தனியார் பங்களிப்புடன் கூடிய இடம் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்  என்று தெரிவித்தார்.


நடைபெற்ற நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய தலைவர் ரெயின்போ கணபதி மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள், பொதுமக்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment